» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 தமிழர்களை காப்பாற்ற கருணை மனு தாக்கல்: சுஷ்மா தகவல்

செவ்வாய் 10, ஜனவரி 2017 5:17:12 PM (IST)

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 தமிழர்களை விடுவிக்க இந்திய அரசு கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன், விருதுநகரை சேர்ந்த செல்லத்துரை பெருமாள் ஆகியோர் கத்தாரில் வேலை பார்த்து வந்தனர். அங்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் கொலை வழக்கில் சிக்கினர். கைது செய்யப்பட்ட இவர்களுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இருவரையும் விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும், இவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, வழக்கு செலவுக்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான எச்.வசந்தகுமாரும், இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, 2 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தூதரகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மற்றொரு தமிழரான சிவக்குமார் அரசனின் சிறைத் தண்டனையை 15 ஆண்டுகளாக குறைத்தது.

தற்போது, இந்த கொலை வழக்கு குறித்த விவரங்களை இந்திய அரசு சேகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2 பேரின் குடும்பங்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தமிழகத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன் மற்றும் செல்லத்துரை பெருமாள் ஆகியோரின் மரண தண்டனை குறித்த அறிக்கையை பெற்றுள்ளேன். இந்த வழக்கில் 2 பேரின் குடும்பத்தினர் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு உதவுமாறு தமிழக அரசை கேட்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua





Nalam Pasumaiyagam



Black Forest Cakes


CSC Computer Education





Thoothukudi Business Directory