» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜல்லிக்கட்டு விவகாரம்.. மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்

புதன் 11, ஜனவரி 2017 11:34:04 AM (IST)



ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியில் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவை அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர்.

அவ்வகையில், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவேவை சந்தித்தனர். அப்போது, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தினர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும், இதற்காக அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்  கூறும்போது: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.  

தம்பிதுரை பேசும்போது, ‘ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் தமிழக கலாச்சாரம் பாதுகாக்கப்படும். வலிமைமிக்க காளைகளை உற்பத்தி செய்து, நாம் கடவுளாக மதிக்கும் காளைக்கு ஜல்லிக்கட்டு என்ற விழாவை எடுக்கிறோம். ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்தப்படுவதில்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறோம். ஜல்லிக்கட்டுக்காக அவசர கட்டம் கொண்டு வரப்பட்டால் இளைஞர்கள் மகிழ்வார்கள்’ என்று கூறினார். இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கும் அ.தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Nalam Pasumaiyagam




CSC Computer Education



selvam aqua


Black Forest Cakes



Thoothukudi Business Directory