» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்த வேண்டும்: பாபா ராம் தேவ் வலியுறுத்தல்

புதன் 11, ஜனவரி 2017 11:42:33 AM (IST)

எதிர் காலத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விடலாம் என யோகா குரு பாபா ராம் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கை துணிச்சலானது என யோகா குரு பாபா ராம் தேவ் பாராட்டு தெரிவித்தார்.

இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம் தேவ் கூறுகையில், "உயர் மதிப்பில் உள்ள ரூ.2000 நோட்டுகள் கூட போலி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. ரத்து செய்யப்பட்ட மற்ற 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலவே தற்போது இந்த போலி 2000 ரூபாய் நோட்டுகளும் நடமாட்டத்தில் உள்ளன.

2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும், அவற்றை பதுக்குவதும் மிகவும் எளிதாகி விடும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் பணத்தை பயன்படுத்தினால் அதிக தேவை ஏற்படும். அதற்கு பதிலாக, நாம் அனைவரும் பணம் இல்லா பரிவர்த்தனைக்கும், பணமில்லா பொருளாதாரத்துக்கும் மாற வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாம் நகரும்போது, பொருளாதாரத்தில் நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும். மேலும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் இனிவரும் காலத்தில் 2000 ரூபாய் கரன்சியை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நாட்டை வலிமையாக்க பிரதமர் மோடி செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




selvam aqua


CSC Computer Education


Nalam Pasumaiyagam


Black Forest Cakes






Thoothukudi Business Directory