» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரூ. 15 லட்சம் மின் கட்டணம் பாக்கி : மும்பை காவல் ஆணையருக்கு மின்வாரியம் நோட்டீஸ்

புதன் 11, ஜனவரி 2017 1:18:22 PM (IST)

மும்பையில் மின் கட்டணம் செலுத்தாத காவல் ஆணையர் அலுவலருக்கு, மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நேவி மும்பையில் அமைந்துள்ள 7 காவல்துறை அலுவலகங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று அம்மாநில மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. 

அதில் காவல் ஆணையர் அலுவலகமும் உள்ளடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகங்கள் அனைத்தும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும் இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், எந்தவித கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக நேவி மும்பையில் உள்ள அனைத்து காவல்துறை அலுவலகங்களும் அபராதத்துடன் சேர்த்து, ரூ.15.62 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேவி மும்பை காவல் ஆணையர், துணை ஆணையர், நெருல் காவல்நிலைய மூத்த காவல் ஆய்வாளர்கள், என்.ஆர்.ஐ சாக்ரி காவல் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தனிநபர் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் உடனடியாக அவரது இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் அரசு அதிகாரிகளே மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Nalam Pasumaiyagam




Black Forest Cakes



CSC Computer Education

selvam aqua



Thoothukudi Business Directory