» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உணவு குறித்து புகார் எழுப்பிய எல்லை பாதுகாப்பு படை வீரர் மாயம்: : விசாரணை நடத்த மனைவி கோரிக்கை

புதன் 11, ஜனவரி 2017 4:12:22 PM (IST)

  

ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை என புகார் தெரிவித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் மாயமாகி விட்டதாக அவரது மனைவி பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு தரமான மற்றும் போதிய உணவு வழங்கப்படவில்லை என்று எல்லை பாதுகாப்புப் படையின் 29-வது பிரிவை சேர்ந்த வீரர் டி.பி.யாதவ் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு உள்ளார். எல்லைப் பாதுகாப்பு படையும் விசாரிப்பதாக கூறியது

எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் யாதவ், பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்துவிட்டார் என்று எல்லைப் பாதுகாப்பு படை கூறிஉள்ளது. குற்றம் சாட்டிய ராணுவ வீரர் அதிகம் மது அருந்துபவர் என்று எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ வீரர் யாதவ் மனைவி சர்மிளா பேஸ்புக் பக்கத்தில் தனது குடும்பத்தினர் தனது கணவரை கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர் எந்த நிலையில் இருக்கிறார் என தெரியவில்லை என கூறி உள்ளார். 

மேலும் இது குறித்து அரசு உடனடியாக விசாரணை நடத்தி தனது கணவருக்கும் தனது குடும்பத்திற்கும் நீதி வழங்கவேண்டும் என கூறி உள்ளார். மேலும் எனது கணவர் என்ன செய்து விட்டார் என் கணவர் நல்லதுதான் செய்து உள்ளார்.வீரர்கள் நலனுக்குதான் அவர் அவ்வாறு செய்து உள்ளார்.அவர் உண்மையை தான் வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் இந்த மக்கல் அவர மன ந்லம் பாதிக்கபட்டவர் என கூறுகிறார்கள். அவர் நல்ல நிலையில் தான் உள்ளார். பிறகு ஏன் அவர் எல்லைபாதுகாப்பு படைக்கு அனுப்பபட்டார்.என கூறி உள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Panchai Dairy



Black Forest Cakes

Nalam Pasumaiyagam


New Shape Tailors


selvam aqua

Johnson's Engineers

CSC Computer Education




Thoothukudi Business Directory