» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மட்டுமே நல்லகாலம் பிறக்கும்: ராகுல்காந்தி சொல்கிறார்

புதன் 11, ஜனவரி 2017 5:20:25 PM (IST)

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மட்டுமே நல்ல காலம் பிறக்கும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில்  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. 

மத்திய அரசின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ரிசர்வ் வங்கியே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இதுபற்றி ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான பாராளுமன்ற நிதி குழு கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பாராளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்து உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய வரலாற்றில் மோசமான முடிவாகும். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவை பிரதமர் மோடி தன்னிச்சையாக எடுத்தார். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் ரிசர்வ் வங்கி போன்ற அரசு அமைப்புகளை பலவீனப்படுத்திவிட்டார். இதுபோன்ற காரணங்களால் வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். நல்ல காலம் எப்போது வரும் என மக்கள் கேட்கிறார்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நல்ல காலம் பிறக்கும் என்றார்.


மக்கள் கருத்து

ஒருவன்Jan 15, 2017 - 08:33:54 AM | Posted IP 117.2*****

தம்பி இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா Complan , Horlicks குடிசிட்டு வா ..

ManithanJan 13, 2017 - 02:39:41 PM | Posted IP 115.2*****

அயோட சாமி...நீங்க ஆட்சில இருந்த பொது கிழிச்சிட்டீங்க ..

சாமிJan 11, 2017 - 10:04:59 PM | Posted IP 160.2*****

எதுக்கு - மீண்டும் அலைக்கற்றை, நிலக்கரி, காமென்வெல்த் இதுபோல விதவிதமா ஊழல் பண்ணவா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

Universal Tiles Bazar



Johnson's Engineers


New Shape Tailors

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Pop Up Here

Black Forest Cakes



Thoothukudi Business Directory