» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்: பிரதமர் மோடியுடன் இன்று மாலை சந்திப்பு

வெள்ளி 19, மே 2017 11:46:04 AM (IST)

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று மாலை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழக  முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு திடீரென விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளனர். பிரதமர் அலுவலகம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. பிரதமர் மோடியிடம் ஓ.பி.எஸ். மற்றும் அணியினர் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி பேச  திட்டமிட்டுள்ளனர். 

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அணி தலைவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி ஆதாரங்களுடன் பல் வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிக்க உள்ளனர். மேலும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுப்பது பற்றியும் பேச உள்ளனர். பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். திடீரென சந்தித்து பேச இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் வர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Johnson's Engineers

selvam aqua

Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors

Pop Up Here

Universal Tiles Bazar







Thoothukudi Business Directory