» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மிக்கு போலி நிறுவனங்கள் நன்கொடை : கெஜ்ரிவால் மோடி செய்ததாக கபில் மிஸ்ரா பேட்டி

வெள்ளி 19, மே 2017 5:52:27 PM (IST)

கெஜ்ரிவால் பண மோசடியில் ஈடுபடுவதால், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அண்மையில் டெல்லி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் டெல்லி அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள கபில் மிஸ்ரா இன்று செய்தியாளர்களை கூறியதாவது:- பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கெஜ்ரிவால் ஏன் கடுமையாக எதிர்த்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஏன் கெஜ்ரிவால் பயணம் மேற்கொண்டார். ஏனெனில் அவருக்கு வேண்டப்பட்டவர் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் அமலாக்கத்துறை சோதனைக்குள்ளானது.

ஆம் ஆத்மிக்கு நன்கொடை அளிப்பவர்களில் போலி நிறுவனங்களின் பட்டியலும் உள்ளது. வாட் வாரியை செலுத்தவில்லை என்று நோட்டீஸ் அனுப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எப்படி ஆம் ஆத்மி நன்கொடை பெற்றுக்கொண்டது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் குமார், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்ததாக தெரிவித்துள்ளார். 

ஆனால், 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்பதற்கு 10 நாட்கள் முன்பு டெல்லி அரசு, முகேஷ் குமாரின் நிறுவனம் வாட் வரியை செலுத்தவில்லை என கூறி, நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகு ஆம் ஆத்மிக்கு முகேஷ் குமார், 2 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். முகேஷ் குமாரின் நிறுவனத்திற்கு எதிராக ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார். 

ஆம் ஆத்மி  மறுப்பு

கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஆம் ஆத்மி கட்சியைச்சேர்ந்த சஞ்செய் சிங், ஆம் ஆத்மியின் கட்சியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு நாளும் ஒரு சதித்திட்டத்தில் ஈடுபடுகிறது. ஆம் ஆத்மி கட்சி பெற்ற ஒவ்வொரு நன்கொடையும் பொது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. விதிகளின்படியே பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியிடம் குறைபாடுகளை கண்டறிய பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், பாஜகவால் எதையும் கண்டறிய முடியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

Johnson's Engineers






selvam aqua


New Shape Tailors






Thoothukudi Business Directory