» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் 13வது குடியரசு துணைத் தலைவராக வெங்கைய்யா நாயுடு பதவியேற்பு

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 12:02:14 PM (IST)



இந்தியாவின் 13வது குடியரசு துணைத் தலைவராக வெங்கைய்யா நாயுடு பதவியேற்றுக்கொண்டார். 

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து அப்பதவிக்கு வெங்கைய்யா நாயுடு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நாட்டின், 13-வது குடியரசு துணைத் தலைவராக அவர் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் இன்று காலை டெல்லியின் ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் வெங்கைய்யா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, தீன் தயாள் உபத்யாய் சிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


மக்கள் கருத்து

உண்மைAug 11, 2017 - 04:00:53 PM | Posted IP 59.99*****

உலகை ஆளும் சிவனே போற்றி! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!

ஸ்.சிவராமன்.Aug 11, 2017 - 01:41:54 PM | Posted IP 103.2*****

தூத்துக்குடி.மாவட்ட.பாரதியஜனதாக்கட்சி.சார்ப்பாக வாழ்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors




Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam


Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory