» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4% குறைப்பு: குஜராத் மாநில அரசு அறிவிப்பு

செவ்வாய் 10, அக்டோபர் 2017 5:32:49 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், குஜராத் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4% குறைக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வலியுறுத்தி வந்த நிலையில், குஜராத் மாநிலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. வாட் வரி 4% குறைக்கப்பட்டதால், குஜராத்தில் பெட்ரோல் விலையில் ரூ.2.93ம், டீசல் விலையில் ரூ.2.72ம் குறையும். இந்த விலை குறைப்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் விலையை மாதத்துக்கு இரு முறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. அதன் பின் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை அமலுக்கு வந்தது. இந்தப் புதிய நடைமுறை காரணமாக கடந்த மூன்று மாதங்களில் இந்த எரிபொருள்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. எனவே, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். 

இதையடுத்து பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இந்த மாதத் துவக்கத்தில் அறிவித்தது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசும் போது மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அவ்வாறு செய்தால் பொதுமக்கள் மேலும் பயன்பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


மக்கள் கருத்து

உண்மைOct 11, 2017 - 03:54:21 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Johnson's Engineers

crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors



Thoothukudi Business Directory