» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

வெள்ளி 13, அக்டோபர் 2017 12:20:08 PM (IST)

டிசம்பர் 31ம் தேதிக்குள் சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.

புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து ஹிமாச்சல் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவித்தார். அப்போது அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்தும் பதிலளித்தார்.  டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே. நகர் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணிக்கா? அல்லது டி.டி.வி.தினகரன் அணிக்கா? என்பது பற்றிய வழக்கை தேர்தல் கமி‌ஷன் விசாரித்து வருகிறது. இதுபற்றிய முடிவை நவம்பர் 10-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd




Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education

Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory