» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சயனைடு மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை ரத்து!!

வெள்ளி 13, அக்டோபர் 2017 12:24:30 PM (IST)

கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 2009ம் ஆண்டு அனிதா(22) என்ற பெண் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் பேருந்து நிலையத்தில் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினருக்கு, இதேப்போன்று அந்த பகுதியில் பல பெண்கள் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. அது பற்றி விசாரித்ததில், கடலோர கர்நாடக மாவட்டங்களில் மட்டும் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 20 பெண்கள் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் சுள்ளியா பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை சயனைடு கொடுத்து கொல்ல முயன்றதாக மங்களூரைச் சேர்ந்த மோகன்குமார் (53) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது, அவர்தான் மேற்கண்ட 20 பெண்களையும் பலாத்காரம் செய்து சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.இது குறித்து மங்களூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து கடந்த 2013ம் ஆண்டு, அனிதா கொலை வழக்கில் மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

மேலும் 2 பெண்கள் கொலை வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 4 பெண்கள் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அனிதா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன்குமார் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவி மாலித், ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு தரப்பில் மோகன் குமாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

சாரதா, ஹேமாவதி ஆகியோரின் கொலை வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் மோகன்குமார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதுவரை 7 பெண்களின் கொலை வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பெண்களின் கொலை வழக்குகள் மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
New Shape Tailors

Johnson's Engineers


Universal Tiles Bazar

selvam aqua


Nalam PasumaiyagamThoothukudi Business Directory