» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 12:32:30 PM (IST)

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  

இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று, தனது முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's EngineersNalam Pasumaiyagam


New Shape Tailors

Universal Tiles Bazar


selvam aqua

CSC Computer Education

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory