» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் கட்சியில் நான் உறுப்பினரே இல்லையா? டெல்லியில் குஷ்பு ஆவேசம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 12:50:46 PM (IST)

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறீர்களா? இல்லையா? என்ற கேள்விக்கு டெல்லியில் குஷ்பு பதில் அளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டெல்லியில் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசினேன். கட்சியில் என்ன மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் கூறினேன். ராகுல்காந்தி உற்சாகமாக இருக்கிறார்.

இளைஞர் காங்கிரசில் உடனடியாக மாற்றங்கள் வரப்போகிறது. சில பணிகளை எனக்கு ராகுல் காந்தி தந்திருக்கிறார். அதை செய்து கொடுக்க வேண்டும். அவர் தலைவராக நியமிக்கப்பட்டால் ரொம்ப சந்தோஷப்படுவோம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், ‘தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சியில் நீங்கள் உறுப்பினராகவே இல்லை என்று கூறுகிறார்களே?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு குஷ்பு அளித்த பதிலில், யார் இந்த கேள்வியை எழுப்புகிறார்களோ? அவர்கள் அதை உறுதி செய்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும். உறுப்பினராக இல்லாவிட்டால் இந்த அளவுக்கு நான் எப்படி பேச முடியும்? ஒரு செய்தி தொடர்பாளராக எப்படி என்னால் செயல்பட முடியும்? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக இருந்தபோது நான் உறுப்பினர் ஆனேன். 2019-ம் ஆண்டு வரை அந்த உறுப்பினர் அட்டைக்கு காலக்கெடு உள்ளது. கேள்வி எழுப்புகிறவர்கள் தங்களது வேலையை எப்படி செய்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

Johnson's Engineers


selvam aqua

New Shape Tailors


Thoothukudi Business Directory