» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதிமன்ற தீர்ப்புக்கு மதசாயம் பூசுவது வேதனை : உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

வெள்ளி 13, அக்டோபர் 2017 1:32:56 PM (IST)

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அக். 18 ம் தேதி வரவிருப்பதையடுத்து, தலைநகர் டெல்லியில், பட்டாசுகள் விற்பனை செய்வதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதன் மூலம், உலகிலேயே காற்று தரத்தில் மிகவும் மோசமானது என்ற இடத்தை பிடித்துள்ள தலைநகர் டெல்லியின் காற்று தரத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரமுடியுமா என்பதைச் சோதிக்க விரும்புவதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பட்டாசுகளின் விற்பனை மற்றும் விநியோகம் மீதான தடை, நவம்பர் 1 வரை நீடிக்கும்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்து இதனை மறு பரிசீலனை செய்யுமாறு கூறினர்.ஆனால்  டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.மேலும்  பஞ்சாப், ஹரியானாவில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே வெடி வெடிக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், தங்கள் உத்தரவுக்கு சிலர் மதசாயம் பூசுவது வருத்தமளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

உண்மைOct 16, 2017 - 01:22:19 PM | Posted IP 122.1*****

இதற்கு பின்னாவது இந்துமக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும்! எதோ நாம் பாகிஸ்தானில் வாழ்வது போல உள்ளது! நமது திருவிழா கொண்டாட அனுமதி கேட்கும் அவள நிலை!

தமிழன்Oct 14, 2017 - 10:57:14 AM | Posted IP 180.2*****

இந்த தடை ஆங்கில புத்தாண்டுக்கும் தொடரும்தானே??????

பாலாOct 13, 2017 - 04:46:04 PM | Posted IP 59.96*****

இந்த தடை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிலும் தொடர வேண்டும்!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Nalam Pasumaiyagam


Johnson's EngineersNew Shape Tailors

Universal Tiles Bazar
Thoothukudi Business Directory