» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெயலலிதாவின் துணிச்சலான நிர்வாகத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்: எடியூரப்பா புகழாரம்

செவ்வாய் 5, டிசம்பர் 2017 3:49:42 PM (IST)

ஜெயலலிதாவின் துணிச்சலான நிர்வாகத்தைக் கண்டு வியந்திருக்கிறேன் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, "தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் அவரை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயலலிதாவின் தைரியம், நம்பிக்கை, துணிச்சலான நிர்வாகம் ஆகியவற்றைக் கண்டு எப்போதும் வியந்திருக்கிறேன். அவரின் இறப்புக்குப் பிறகு கடந்த ஓராண்டாக நடைபெறும் தமிழக அரசியல் நிகழ்வுகள், அவரைப் போன்ற தலைவரின் தேவையை நினைவுபடுத்துகின்றன" என்று புகழாரம் சூட்டியுள்ளார்..


மக்கள் கருத்து

உண்மைDec 6, 2017 - 01:51:55 PM | Posted IP 122.1*****

அவர் உயிரோடு இருந்தவரை பிரிவினைவாதிகள் நடிகர்கள் மற்றும் வெளிநாட்டு கைக்கூலி அமைப்புகள் இருந்த இடம் தெரியாமல் இருந்தனர்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

Johnson's Engineers

New Shape Tailors


selvam aqua



Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory