» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஊழல் புகாரில் சிறைக்குச் சென்றது நினைவுக்கு வரவில்லையா? அமித்ஷாவுக்கு சித்தராமையா கேள்வி

வியாழன் 11, ஜனவரி 2018 12:37:44 PM (IST)

ஊழல் குறித்து பேசும் அமித்ஷாவுக்கு எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா? என்று முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

சாமராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் நகரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அவர் பேசியது: முந்தைய பாஜக ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று திரும்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு, எனது தலைமையிலான அரசு மீது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியிருக்கிறார்.

ஊழல் குறித்து பேசும் அமித்ஷாவுக்கு எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா? அதேபோல ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் சிறைக்குச் சென்று திரும்பியதும் நினைவுக்கு வரவில்லையா? அமித்ஷாவே சிறைக்குச் சென்று திரும்பியவர்தான். அதுமட்டுமல்லாது, அமித்ஷா இரண்டு ஆண்டுகள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். பெங்களூரு வந்துள்ள அமித்ஷா, அதிகாலை 3 மணிவரை கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அமித்ஷா எந்த தந்திரங்களில் ஈடுபட்டாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றாது என்ற அறிக்கை கிடைத்திருப்பதால், அவர் வேதனை அடைந்துள்ளார்.

அதனால்தான் எனது அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். தேசியத் தலைவராக இருக்கக்கூடிய அமித்ஷா தனதுகட்சியினர் கூட்டங்களில் மத்திய அரசின் சாதனைகளைக் கூறி, மக்களை சந்திக்க வேண்டும். மக்களின் ஆதரவை பெற மத்திய அரசின் சாதனைகளைக் கூறாமல், மாநிலத்தில் மதக் கலவரங்களில் ஈடுபடுங்கள், துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தும் வகையில் கலவரங்களை நடத்துங்கள் என்று கட்சியினருக்கு வழிகாட்டுதல் வழங்குகிறார்.

மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதி குறித்து அமித்ஷா பேசி வருகிறார். மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கும் பணம் யாருடையது? மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பங்குத்தொகைதானே. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதியாகும். எனவே, அந்த நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு விடுவிக்கும் நிதியை கேட்க அமித்ஷா இங்கு வரவேண்டுமா? இதை கேட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா?  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஒழிந்தால்தான் மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். எடியூரப்பா சிறைக்குச் சென்று வந்தாரே அப்போது கர்நாடகத்தில் எந்தகாலம் இருந்தது என்பதை அமித்ஷாதான் கூற வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers








New Shape Tailors


selvam aqua

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory