» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தானில் ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி: வசுந்தரா ராஜே அறிவிப்பு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 3:55:19 PM (IST)

ராஜஸ்தானில் ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ. தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து உஷாரான பா.ஜ. அரசு விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். 

இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான கூட்டுறவு கடன்கள் தள்ளுபடியாகும். இதன் மூலம் 20 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். அதேசமயம் அம்மாநில அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இது குறித்து எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் இது குறித்து கூறுகையில் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்று வேலை. பெரும்பான்மையான விவசாயிகள் அரசு வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கூட்டுறவு கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் குறைவான விவசாயிகளே பலன் அடைவார்கள் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers








Thoothukudi Business Directory