» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்

புதன் 14, பிப்ரவரி 2018 5:34:27 PM (IST)

மருத்துவமனைகளில் டாக்டர்களின் பரிந்துரையின்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அடிக்கப்படும் கேட்கப்படும் கேள்விகளுக்கு வருவாய் துறை விளக்கம் அளித்து வருகிறது. அதன்படி தற்போது மருத்துவர்கள் வழங்கும் சேவை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு வருவாய் பதில் அளித்துள்ளது. அதில் மருத்துவமனை நிர்வாகங்கள் பணி அமர்த்தும் மூத்த டாக்டர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழங்கும் சேவைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது. அவர்களின் சேவை மருத்துவபராமரிப்பு பிரிவில் வருவதே இதற்கு காரணம்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது. அதேசமயம் புறநோயாளிகள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers








New Shape Tailors




Thoothukudi Business Directory