» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் விரைவில் இலவச வை-பை வசதி : முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் உறுதி

புதன் 14, பிப்ரவரி 2018 8:06:42 PM (IST)

தலைநகர் டெல்லியில் விரைவில் இலவச வை-பை இன்டர்நெட் வசதி தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எங்களை ஆட்சியில் அமர்த்தினால் டெல்லி முழுவதும் இலவச வை-பை வசதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆம் ஆத்மியின் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். மேலும் ஆட்சி பொறுப்பில் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் கொண்டு வந்தனர்.கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தனது தேர்தல் வாக்குறுதியான இலவச வை-பை வசதியை நிறைவேற்றாமல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லி முழுவதும் இலவச வை-பை வசதி தொடங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி அரசின் 3வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: இலவச வை-பை வசதியை எப்போது தொடங்கப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். இந்த ஆண்டில் இந்த இலவச வை-பை வசதி அமலுக்கு வரும். ஆனால் இதற்காக பட்ஜெட்டில் தனியாக நிதி ஓதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals






Johnson's Engineers






Thoothukudi Business Directory