» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 11-ம்தேதி பத்திரிக்கையாளர்கள் மாநாடு: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

புதன் 4, ஜனவரி 2017 5:28:50 PM (IST)

அமெரிக்காவில் வருகிற 11-ம்தேதி பத்திரிக்கையாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே, அமெரிக்க அதிபராக முடியும். இதில், டிரம்ப், 279 தேர்வு குழு உறுப்பினர்களையும், ஹிலாரி, 218 தேர்வு குழு உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றனர். இதனையடுத்து கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப் ஜனவரி 11-ம்தேதி பத்திரிக்கையாளர்கள் மாநாடு நடைபெற இருப்பதாக அவர் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார் . இந்த பத்திரிக்கை மாநாடு 9 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Nalam Pasumaiyagam

CSC Computer Education



selvam aqua


New Shape Tailors

Black Forest Cakes

Johnson's Engineers


Panchai Dairy



Thoothukudi Business Directory