» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு : அயர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை

புதன் 4, ஜனவரி 2017 6:37:03 PM (IST)




மனித உடலில் இது வரை மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றினை அயர்லாந்தின் உடற்கூறியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் நடுமடிப்பு, (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத்துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும். இதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இது மனிதனின் உடலில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 79வது உறுப்பு ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar

New Shape Tailors

Johnson's Engineers

Nalam Pasumaiyagam




Black Forest Cakes

Pop Up Here


CSC Computer Education

selvam aqua




Thoothukudi Business Directory