» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி

வெள்ளி 6, ஜனவரி 2017 4:11:07 PM (IST)

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரை அந்நாட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரை உடனடியாக விடுக்விக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அந்நாட்டு அரசிடம் கோரிகை வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான இந்தியா-இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில், பரஸ்பரம் இருநாட்டுச் சிறைகளில் இருக்கும் மீனவர்களை விரைந்து விடுதலை செய்வது தொடர்பாக நிலையான நடைமுறைகளை ஏற்படுத்தவும் இரு நாடுகளும் அண்மையில் ஒப்புக் கொண்டன. 

அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின் விளைவாக, 51 இந்திய மீனவர்களை (தமிழக மீனவர்களை) இலங்கை விடுதலை செய்ய முன் வந்தது. இதற்கு பதிலாக இந்தியச் சிறையில் இருக்கும் 3 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. 

விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படை, மீன்பிடிப் படகுகளையும் கைப்பற்றி எடுத்துச் சென்று விடுகிறது. எனினும், தமிழக மீனவர்களை தொடர்ந்து விடுதலை செய்யும் இலங்கை, படகுகளை மட்டும் திருப்பி ஒப்படைப்பதில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


selvam aqua

Black Forest Cakes




Nalam Pasumaiyagam

CSC Computer Education








Thoothukudi Business Directory