» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்தது உண்மையே: அமெரிக்க புலனாய்வுத் துறை

வெள்ளி 6, ஜனவரி 2017 5:55:09 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்த அறிக்கையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் நேற்று அமெரிக்க புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் ஒப்படைத்தார். இதுகுறித்து ஜேம்ஸ் கிளாப்பர் தரப்பில்,"அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதற்கான ஆதரங்கள் உள்ளன. ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்பதை எங்களால் கூறமுடியவில்லை. ஆனால் ரஷ்யா அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இது தொடர்பான விரிவான விளக்கத்தை ஜேம்ஸ் கிளப்பர் அளிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறும்போது, "ரஷ்யா மீதான புலனாய்வுத் துறையின் விசாரணை வெளிப்படையானது என அமெரிக்க அதிபர் ஒபாமா நம்புகிறார்" என்று கூறினார்இ ந்த விவகாரம் தொடர்பான அறிக்கை ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வரும் அமெரிக்க புதிய அதிபர் ட்ரம்ப்பிடம் இன்று (வெள்ளிக்கிழமை) விளக்கப்படவுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா சைபர் க்ரைம் குற்றத்தில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam



Black Forest Cakes




New Shape Tailors

Universal Tiles Bazar

Johnson's Engineers

selvam aqua


Panchai Dairy

CSC Computer Education



Thoothukudi Business Directory