» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடு: ஐநாவிடம் பாக். தூதர் அறிக்கை

சனி 7, ஜனவரி 2017 12:24:55 PM (IST)

பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடுவது குறித்த ஆவணங்களை ஐநாவின் புதிய பொதுச்செயலாளர் அந்தோனியோ காட்டர்ஸிடம் வழங்கியிருப்பதாக பாகிஸ்தானின் ஐநா தூதர் தெரிவித்துளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பாகிஸ்தானுக்கான நிரந்தர  தூதரான மலீஹா லோதி, ஐநாவின் புதிய பொதுச்செயலாளர் அந்தோனியா காட்டர்ஸை சந்தித்து கோப்பு ஒன்றை வழங்கினார். அதில், பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகவும் பயங்கரவாதத்தை பாகிஸ்தானுக்குள் இந்தியா தூண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் பணியில் உலக நாடுகள் முக்கிய பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த கோப்புகளோடு பாகிஸ்தான் பிரதமர் ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் வழங்கிய கடிதத்தையும் அவர் வழங்கினார். ஐநா பொதுச்செயலாளர் காட்டர்ஸ்  செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும் போது, " இந்த சந்திப்பு பாகிஸ்தான் தூதர் கோரிக்கையில் பேரில் நடைபெற்றது என்றார். இந்த சந்திப்பின் போது  ஆலோசிக்கப்பட்ட அம்சம் என்ன என்பது பற்றி கேட்ட போது, அது பற்றி தெளிவாக கூற மறுத்துவிட்டார்,

பாகிஸ்தான் வழங்கிய கோப்புகளில், இந்தியாவின் ரா  உளவு பிரிவு பாகிஸ்தானில் உள்விவகாரங்களில் தலையிடுவது, பலுசிஸ்தான், கராச்சி போன்ற இடங்களில் இந்தியா பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டில் இது போன்ற ஆவணங்களை பாகிஸ்தான் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Johnson's Engineers

CSC Computer Education


selvam aqua

Black Forest Cakes



Pop Up Here

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

New Shape Tailors



Thoothukudi Business Directory