» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சேவை மையம் துவக்கம்

சனி 7, ஜனவரி 2017 2:11:55 PM (IST)

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் சமூக சேவைகள் செய்யப்பட உள்ளன.இந்த மையத்தை அமெரிக்க எம்.பி.க்கள் இல்லினாய்சை சேர்ந்த டேன்னி கே. டேவிஸ் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கியுள்ளனர். இவர்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் தலைமை அலுவலகம் இல்லினாய்சில் உள்ள சிகாகோவில் உள்ளது.

தொடக்க விழாவின் போது ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த விழாவில் டேன்னி டேவிஸ் பேசும் போது ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள் உலக அளவில் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்று பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Johnson's Engineers



Thoothukudi Business Directory