» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உயிருக்கு ஆபத்து இருந்தாலும், பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் பிரான்சிஸ் திட்டவட்டம்

திங்கள் 9, ஜனவரி 2017 8:56:53 AM (IST)



போப் ஆண்டவர் பிரான்சிஸ் (80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார். அதில் அவர், ‘‘எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்காக நான் கவலைப்படுகிறேன். ஆனாலும் கடவுள் எப்போதும் இருக்கிறார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘‘ நான் எப்போதும் குண்டு துளைக்காத கார்களை எங்கு சென்றாலும் பயன்படுத்த முடியாது. போப்புக்குரிய குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்திய கார்களையும் பயன்படுத்த இயலாது. பாதுகாப்பு தேவை குறித்து நான் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளேன். ஆனாலும், போப் என்பவர் ஒரு ஆயர். அவர் ஒரு தந்தை. அவருக்கும் மக்களுக்கும் இடையே அளவு கடந்த (பாதுகாப்பு) தடைகள் இருக்க முடியாது. இதனால்தான் நான் ஆரம்பம் முதல், மக்களை சந்திக்க முடியும் என்றால்தான் நான் பயணம் செய்வேன் என கூறி வந்துள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார். 

போப் ஆண்டவர் பிரான்சிஸ், முந்தைய போப் ஆண்டவர்களைப் போன்று குண்டு துளைக்காத ‘புல்லட் புரூப்’ வாகனங்களை பயன்படுத்துவதில்லை. வெளிநாட்டு பயணங்களின்போதும் சாதாரண கார்களையே பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


selvam aqua

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Panchai Dairy


Johnson's Engineers


New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory