» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாய்க்கு மரண தண்டனை : வினோத தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்

வியாழன் 18, மே 2017 8:58:47 PM (IST)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பாக்கர் என்ற நகரில்தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் உதவி கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் கூறினார்.

நாய் செய்த தவறுக்காக, அதன் எஜமானர் ஜமீல் என்பவருக்கு ஏற்கனவே ஒரு வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் அந்த தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். தற்போது, தனது நாய்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

Sterlite Industries (I) Ltd


New Shape Tailors

Johnson's Engineers

CSC Computer Education


Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory