» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர் அதானிக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம்

ஞாயிறு 8, அக்டோபர் 2017 12:15:57 PM (IST)

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் சுரங்கத் தொழில் நிறுவனமான அதானிக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்தியாவின் சுரங்கத் தொழில்a நிறுவனமான அதானிக்கு ஆஸ்திரேலியாவின் குயின்லாந்தில் மிகப்பெரிய கார்மைக்கேல் சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. இது சுற்றுச்சூழல் மற்றும் நிதியியல் பிரச்சினைகள் தொடர்பாக தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு வடஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் பாதிக்கும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

அதானி நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட் கோஸ்ட் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உறுதியளித்துள்ளதாகவும், ஆஸ்திரேலியாவின் பிராந்தியத்தில் இந்த திட்டத்திற்கு பெரும் ஆதரவு இருப்பதாக அதானி நிறுவனத்தின் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி ஜெயகுமார் ஜனகராஜ் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மைOct 9, 2017 - 12:31:55 PM | Posted IP 122.1*****

அடே உண்மை என்று பெயரிட்டாள் மட்டும் போதாது! உண்மையாக இருத்தல் வேண்டும்! மதானி என்பவன் அல் உம்மா தீவிரவாதி! அதானிக்கும் மதானிக்கும் வித்யாசம் தெரியாத மூடர்கள்!

உண்மைOct 8, 2017 - 10:23:28 PM | Posted IP 178.1*****

இந்த மதானியை மோடி ஏழை மக்களை கொன்று பணக்காரனாகி விட்டதுபோல் எல்லாரும் செய்ய முடியுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Universal Tiles Bazar

New Shape Tailors



selvam aqua

CSC Computer Education




Thoothukudi Business Directory