» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டன் - சீனா எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

திங்கள் 9, அக்டோபர் 2017 12:58:00 PM (IST)

இந்தியாவை ஆட்சி புரிந்த பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 1890-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்று நடக்க வேண்டுமென்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சீனாவுக்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் இடையே எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டதாக சீனா கூறி வருகிறது. முன்னதாக, சிக்கிம் மாநில எல்லைப் பகுதியான நாதுலா பகுதிக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களையும், இந்திய திபெத் எல்லைக் காவல் படை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே, எல்லை விவகாரம் தொடர்பான பிடிஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் எழுத்துமூலம் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா-இந்தியா இடையிலான சிக்கிம் பகுதி வரலாற்றிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்த உண்மையை இந்தியத் தரப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எல்லைப் பகுதியில் அமைதியும், ஒத்துழைப்பும் அதிகரிக்க சீனாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியா-சீனா இடையே டோக்கா லாம் எல்லைப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டபோது, பிரிட்டன்-சீனா இடையில் 1890-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தத்தை சீனத் தரப்பு நேரடியாக குறிப்பிட்டுப் பேசியது. ஆனால், இப்போது இந்த ஒப்பந்தத்தை வரலாற்று ஒப்பந்தம் என்று மட்டும் சீனா கூறியுள்ளது. இந்தியா-சீனா இடையே ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாசலப் பிரதேசம் வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு எல்லை உள்ளது. இதில் 220 கி.மீ. தொலைவு சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வுகாண இரு தரப்பும் இதுவரை 19 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

selvam aqua

Johnson's Engineers




New Shape Tailors


CSC Computer Education

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory