» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் அசாத்திய திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ)

செவ்வாய் 14, நவம்பர் 2017 12:11:20 PM (IST)



நார்வே நாட்டில் சாலையில் அதிவேகத்தில் வந்துக்கொண்டு இருந்த டிரக் முன்பு ஓடிய சிறுவன், நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.

பள்ளி சென்று வீடு திரும்பிய இரண்டு சிறுவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி சாலை கடக்க முயன்றனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் பேருந்து புறப்பட்டவுடன், சாலையை வேகமாக கடக்க முயல, சாலையின் அப்புறத்தில் இருந்து அதிவேகத்தில் ஒரு டிரக் வருகிறது. சிறுவனுக்கு மிக மிக அருகில் சென்று டிரக் நிற்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கோ கண்விழி இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்து விடும் அளவிற்கு ரத்த நாளங்கள் ஏறி இறங்குகிறது.

சிறுவன் சிறுகாயங்கள் கூட இல்லாமல் உயிர் பிழைக்கிறான். டிரக்கிற்கு ஒரு சிறு கீறல் கூட இல்லை. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலர், டிரக் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டு இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நார்வே நாட்டில் நடந்த இந்த விபத்து வைரலாகி வரும் சூழ்நிலையில், இந்த டிரக் மற்றும் அதை தயாரித்த நிறுவனம் என்ன என்பதையும் பல வலைதளவாசிகள் தேடி வருகின்றனர்.

அதேபோல டிரக்கின் செயல்பாடுகளும் அதிலுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் என்ன என்பது பெரிய விவாதத்தையும் சமூகவலைதளங்களில் கிளப்பியுள்ளது. சாலை பற்றிய தீவிர கண்காணிப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்ட நாடு நார்வே. ஐரோப்பாவில் உள்ள நார்வே மின்சார வாகன பயன்பாட்டை உலகளவில் தீவிரப்படுத்திய முதல் நாடாகும். மின்சார வாகன பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க நார்வே சரியான திட்டவடிவங்களை கையாண்டது. அதை பின்பற்றி தான் பல உலக நாடுகள் மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகிறது.


மக்கள் கருத்து

ஒருவன்Nov 14, 2017 - 01:39:52 PM | Posted IP 117.2*****

வெளிநாட்டவர் கண்டுபிடித்த சொகுசு லாரிகள் , டிரக் கள், எல்லாம் தரம் வாய்ந்தவை , பிரேக் வேகமாக பிடித்தால் நிற்கக்கூடிய திறன் வாய்ந்தவை , ஜெர்மன் தயாரிப்பாக இருக்கலாம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Johnson's Engineers

Universal Tiles Bazar

selvam aqua


CSC Computer Education



Sterlite Industries (I) Ltd


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory