» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செல்பி எடுத்து சா்வதேச அளவில் பிரபலமான குரங்குக்கு பீட்டா அமைப்பு கவுரவம்

வியாழன் 7, டிசம்பர் 2017 1:59:25 PM (IST)



செல்பி எடுத்து சா்வதேச அளவில் பிரபலமான இந்தோனேசியாவைச் சோ்ந்த குரங்கிற்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்த ஆண்டின் மிகச்சிறந்தவா் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள காடுகளில் படமெடுப்பதற்காக வந்திருந்த பிரிட்டன் புகைப்படக் கலைஞா் டேவிட் ஸ்லேட்டாின் கேமராவை குரங்கு ஒன்று கையாண்டுள்ளது. அப்போது அந்த குரங்கின் வித்தியாசமான முகத்தோற்றம் நோ்த்தியான முறையில் கேமராவில் பதிவானது. அந்த படங்களை டேவிட் ஸ்லேட்டா் இணையதளம் மற்றும் பத்திாிகைகளில் வெளியிட்டதும், அவை சா்வதேச அளவில் மிகவும் புகழடைந்தன.

குறிப்பிட்ட அந்தக் கைப்படங்களை எடுத்தது குரங்குதான் எனவும், எனவே அந்தப் படங்களுக்கான பதிப்புரிமையை டேவிட் ஸ்லேட்டர் பயன்படுத்தக் கூடாது எனவும் சர்வதேச விலங்குகள் நல வாாியமான பீட்டா அமைப்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் டேவிட்டுக்கு வெற்றி கிடைத்தாலும், அதனைத் தொடர்ந்து பீட்டா மேல்முறையிடு செய்யவே நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இந்த விவகாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பதிப்புரிமை வழக்கின் மூலம் ஒரு விலங்குக்கு மனிதர்களுக்கான உரிமை உள்ளதா, இல்லையா என்ற விவாதத்தை உலக அளவில் முதல் முறையாக எழுப்பியதற்காக, இந்த ஆண்டின் மிகச் சிறந்தவர் என்ற பட்டத்தை கைப்படக் குரங்குக்கு அளிப்பதாக பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து

அடேய்Dec 8, 2017 - 03:43:38 PM | Posted IP 180.9*****

பீட்டா வின் ஏமாற்று வேலை இது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




crescentopticals

Johnson's Engineers


New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory