» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாக். மீதான அமெரிக்காவின் நிதித் தடைக்கு இந்தியா முக்கிய காரணம்: சீன ஊடகம் குற்றச்சாட்டு

திங்கள் 8, ஜனவரி 2018 5:28:04 PM (IST)

பயங்கரவாத சம்பவங்களுக்கு தொடர்ந்து துணை போவதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதிக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை முடிவுதான் முக்கிய காரணம் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது. 

மேலும், பாகிஸ்தானுடன் சீனா நல்லுறவுடன் செயல்பட்டு தெற்காசியாவில் சக்தியாவய்ந்த கூட்டணியாக அமைய வேண்டும் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சீன ஊடக நிறுவனமான குலோபல் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதிக்கு தடை விதித்ததற்கு இந்தியாவின் சமீபத்திய வெளியுறவுத்துறை கொள்கை முடிவு தான் முக்கிய காரணம். அண்டை நாடுகளுடனான சுமூக உறவு மேம்பட இந்தியா தனது வெளியுறவுத்துறை கொள்கை முடிவு தொடர்பான நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

அண்டை நாடுகளுகளுடனான உறவை மேம்படுத்தும் விதாமாக இனி சீனா மற்றும் ரஷியாவுடனான உறவில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் மத்திய வங்கி அதன் பொருளாதார கொள்கையை அமெரிக்க டாலரில் இருந்து சீனாவின் யுவானுக்கு மாற்றியமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.  அதுபோல சீனாவும் வணிக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் பாகிஸ்தானுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சீனா, பாகிஸ்தான் இடையிலான உறவு அமெரிக்காவுக்கு எதிரானது என்று நினைக்கத் தேவையில்லை. மாறாக, தெற்காசிய நாட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேம்படுவது தொடர்பாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors


Universal Tiles Bazar




selvam aqua

Johnson's Engineers






Thoothukudi Business Directory