» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தேர்தலில் சீட்டு கேட்டதால் நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜபக்சே நண்பர்: நடிகை பரபரப்பு புகார்!!

செவ்வாய் 9, ஜனவரி 2018 12:39:40 PM (IST)

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு கேட்டதால் ராஜபக்சே நண்பர் தன்னை நிர்வாணமாக நிற்க சொன்னதாக நடிகை மதுசா ராமசிங்கே பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார். இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு அழைத்து முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என லஞ்சம் கேட்டிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் தி சண்டேலீடர் ஏட்டின் இணைய பதிப்பிடம் கூறியுள்ளதாவது: ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்காக நான் பாடுபட்டிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால் நாமும் போட்டியிடலாம் என முடிவெடுத்தேன். ஆனால் ராஜபக்சேவின் நண்பரோ என்னை நிர்வாணமாக நிற்க வேண்டும் என கூறினார். இந்த கொடுமையை மகிந்த ராஜபக்சேவிடமும் தெரிவித்தேன். மகிந்த ராஜபக்சேவோ எதனையுமே கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறினார். என்னை நிர்வாணமாக நிற்க சொன்ன நபர் மீது ராஜபக்சே எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இவ்வாறு நடிகை மதுசா ராமசிங்கே கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers




selvam aqua


New Shape Tailors


Universal Tiles Bazar






Thoothukudi Business Directory