» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் நாடாளுமன்ற உறுப்பினராகும் முதல் இந்து பெண்மணி கிருஷ்ணா குமாரி!!

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:21:16 AM (IST)

பாகிஸ்தானில் நாடாளுமன்ற உறுப்பினராக இந்து மதத்தை சேர்ந்த பெண் கிருஷ்ணா குமாரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

அந்நாட்டில் முதல் முறையாக இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 3ம் தேதியன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபைக்கு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) செனட் தேர்தலில் கிருஷ்ணா குமாரிக்கு வாக்கு அளிக்கும்படி தனது கட்சியை சேர்ந்த சிந்து மாகாண உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா குமாரி செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

கிருஷ்ணா குமாரி இது குறித்து கூறுகையில் எனது கட்சியான முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி குறித்து பெருமைப்படுகிறேன். எனது கட்சி தலைமைக்கு நன்றியுடன் இருப்பேன். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals


Johnson's Engineers

New Shape Tailors






Thoothukudi Business Directory