» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவிக்கும் பாகிஸ்தான்!!

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:27:42 AM (IST)

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான அவசர சட்டத்துக்கு பாகிஸ்தானின் அதிபர்  ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அங்கு வசித்து வரும் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு தீவிரவாதியாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008ம் ஆண்டில் இந்தியாவில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா தலைவர் தீவிரவாதி ஹபீஸ் சயீத். இந்தியா மற்றும் உலக நாடுகளின் தொடர் வற்புறுத்தல் காரணமாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. இதனையடுத்து ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி ஹபீஸ் சயீத் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 2017 ஜனவரியில் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை கைது செய்து 90 நாட்கள் வீட்டு காவலில் பஞ்சாப் மாகாண அரசு வைத்தது. மேலும் தொடர்ந்து வீட்டு காவலை நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஹபீஸ் சயீத்தை வீட்டு காவலிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு அவசர சட்டம் இயற்றியது. 

இதற்கு அந்நாட்டு அதிபர் ஹூசைன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது அந்த அமைப்புகளின் அலுவலகத்துக்கு சீல் வைப்பது மற்றும் வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த அவசர சட்டம் தீவிரவாத அமைப்புகளுக்கு கடிவாளம் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு தீவிரவாதியாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





New Shape Tailors


Johnson's Engineers



Thoothukudi Business Directory