» செய்திகள் - விளையாட்டு » உலகம்

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து

புதன் 14, பிப்ரவரி 2018 12:07:05 PM (IST)

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

இந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

அதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறும்போது, "வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors


Johnson's Engineers






Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





Thoothukudi Business Directory