» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் இருமுடி விழா

சனி 13, பிப்ரவரி 2016 9:03:10 AM (IST)



சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில் குரு பூஜை, சக்திமாலை இருமுடி விழா நடந்தது.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளிபராசக்தி தவசித்தர் பீடமும் ஒன்றாகும். அங்கு ஆண்டுதோறும் சித்தர் தவ குரு பூஜை, சக்திமாலை இருமுடி விழா நடைபெறும். நேற்று 29-வது ஆண்டு சித்தர் தவ குரு பூஜை மற்றும் சக்திமாலை இருமுடி விழா நடந்தது. இதையொட்டி காலையில் காளிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் 42 அடி உயர வெட்காளி அம்மன் சிலைக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மும்மத பிரார்த்தனை நடந்தது.

பின்னர் 5 அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழியில் இறங்கி ராமமூர்த்தி சுவாமி பூமி பூஜையை நடத்தினார். பழங்கள், பூக்களை தூவினர். பக்தர்கள் வழிபட்டனர். சுமார் 2 மணி நேரம் பூமி பூஜை நடத்திய பின்னர் ராமமூர்த்தி சுவாமி, குழியில் இருந்து வெளியே வந்தார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி, கோவிலுக்கு வந்தனர். தவசித்தர் பீடத்தில் பக்தர்கள் இருமுடியை இறக்கி வைத்து வழிபாடு நடத்தினர்.


மக்கள் கருத்து

serarajanSep 3, 2017 - 05:38:26 PM | Posted IP 168.2*****

Amma

தாட்சாயிணி க/பெ சரவணன்மே 19, 2017 - 06:46:05 PM | Posted IP 157.5*****

இந்த கோயிலுக்கு எப்படி வரவேண்டும் எங்களுக்கு வழியை தெரிய படுத்தவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

New Shape Tailors

Black Forest Cakes

Johnson's Engineers


CSC Computer Education

selvam aqua



Pop Up Here




Thoothukudi Business Directory