» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில் மாரத்தான் போட்டி : 1300 பேர் பங்கேற்பு

ஞாயிறு 8, ஜனவரி 2017 11:53:55 AM (IST)தூய்மை பாரதம் திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் நடத்திய மினிமாரத்தான் போட்டியை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர்ஆனந்த சந்திர போஸ் தூத்துக்குடி பழைய துறைமுக நுழைவாயிலில் வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் என்று நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் சுமார் 1500 பேர் பங்கேற்றனர்.இந்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பள்ளி விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஆனந்த சந்திர போஸ் மற்றும் துணைத்தலைவர்நடராஜன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.சிறுவர்கள் பிரிவில் முருகன் (ஸ்ரீவைகுண்டம்), காமராஜ் (புதுகோட்டை) மற்றும் அஜித்குமார் (தூத்துக்குடி) முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர். பெண்கள் பிரிவில் ஜெயபாரதி (காட்டுநாயக்கன்பட்டி), சுப்புலட்சுமி (திருநெல்வேலி), செல்வி (திருநெல்வேலி) முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர். ஆண்கள் பிரிவில் நிகில் குமார் (ஊட்டி), ரூபன் டேனியல் (வீரவநல்லூர்) மற்றும் ராஜபெருமாள் (திருச்செந்தூர்) முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர். 

இந்நிகழ்ச்சியில் துறைமுக சபை உறுப்பினர்கள் செல்வராஜ் மற்றும் பொன் வெங்கடேஷ், செயலாளர் மோகன், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், நிதி ஆலோசகர் மற்றும் உயர் கணக்கு அதிகாரி சாந்தி ,கங்காதேவி நடராஜன் பரிசுகளை வழங்கினர்.சிறுவர்கள் பிரிவில் முதல் மூன்றிடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ. 5000, ரூ. 3000 மற்றும்ரூ. 2000 பரிசுத்தொகையும், பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் முதல் மூன்றிடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ. 10000, ரூ. 8000 மற்றும் ரூ. 6000 பரிசுத்தொகையும், ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கான பிரிவில் முதல் மூன்றிடம் பெற்றவர்களுக்கு முறையேரூ. 3000, ரூ. 2000 மற்றும் ரூ. 1000 பரிசுத்தொகையும் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளுடன் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

கம்ப்யூட்டர் பொறியாளர்Jan 8, 2017 - 10:19:21 PM | Posted IP 59.93*****

தூய்மை பாரதம் திட்டம் எல்லாம் முடங்கி கிடைக்கறது, பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளது, கொசுக்கள் பெருகியுள்ளது , ஏம்பா சுத்தம் செய்ய சொல்லாமல் இப்படி ஓட வச்சிடீங்களே , இனி ஓடும் பாரதம் என்று பெயர் வையுங்க..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Johnson's Engineers


crescentopticals


Thoothukudi Business Directory