» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வாலிபர் மர்மசாவு: போலீஸ் விசாரணை

திங்கள் 9, ஜனவரி 2017 11:51:03 AM (IST)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் ஓட்டப்பிடாரம் செல்லும் பஸ்கள் நிறுத்துமிடத்தின் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனிஸ் ஜேசுபாதம், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபருக்கு அருகே கிடந்த பேக்கில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனையிட்டனர். 

அதன் மூலம் அவர் புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குருசாமி (37) என்பது தெரியவந்தது. டெய்லாரன இவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாராம். சென்னையில் இருந்து இன்று காலை பேருந்தில் தூத்துக்குடி வந்த அவர், சொந்த ஊருக்குச் செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes









CSC Computer Education



Thoothukudi Business Directory