» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4–வது குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு

செவ்வாய் 10, ஜனவரி 2017 7:56:16 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில்  4–வது குடிநீர் குழாய் திட்டப்பணிகளை சென்னை உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4–வது குடிநீர் குழாய் திட்டம் ரூ.282.44 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று ரூ.76 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் முதுநிலை உதவி துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 7 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் 4–வது குடிநீர் குழாய் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மாலையில் மாநகராட்சி ஆணையர் ராஜாமணியுடன் ஆலோசனை நடத்தினர். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

ராஜ்குமார்Jan 11, 2017 - 10:54:33 AM | Posted IP 117.2*****

தண்ணீர் வந்து 15 நாட்கள் ஆகிறது.

ராஜ்குமார்Jan 11, 2017 - 10:53:54 AM | Posted IP 117.2*****

தண்ணீர் எப்ப வரும்.

ராய்ஸ் பரதன்Jan 11, 2017 - 10:05:12 AM | Posted IP 182.7*****

இது புண்ணிய நாடு , ஆனால் மோசமான கோவெர்மென்ட் மோசமணன் சாக்கடை அரசியல் வாதிகள் இவர்கள் எல்லோரும் ஓக்க பட வேண்டியவங்க !!!!

ராய்ஸ் பரதன்Jan 11, 2017 - 10:01:47 AM | Posted IP 182.7*****

முதலில் தூத்துகுடிய சுற்றி உள்ள எல்லா பேக்டரி க்கும் தண்ணிய நிப்பாட்டுக்குங்க !!!!!!!!!!!!!

சிவகுமார்Jan 11, 2017 - 09:59:59 AM | Posted IP 182.7*****

குடி தண்ணீர் எப்போ வரும் ??????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Black Forest Cakes


CSC Computer Education






selvam aqua

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory