» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து புது மாப்பிள்ளை சாவு: திருமணமான 3 மாதத்தில் சோகம்

புதன் 11, ஜனவரி 2017 7:50:12 AM (IST)

கோவில்பட்டி அருகே பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து புது மாப்பிள்ளை பலியானார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடியைச் சேர்ந்தவர் வாசு. இவருடைய மகன் வினோத்குமார் (22). இவர் கோவில்பட்டி அருகே புதுப்பட்டியில் உள்ள கல் குவாரியில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும், ஜெர்மினா என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வினோத்குமார் நேற்று காலையில் வழக்கம்போல் கல் குவாரிக்கு வேலைக்கு சென்றார். 

அவர் மதியம் கல்குவாரி வளாகத்தில் உள்ள மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அள்ளி, லாரியில் நிரப்பி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் திடீரென சரியத் தொடங்கியுள்ளது. உடனே வினோத்குமார் பொக்லைன் எந்திரத்தில் இருந்து கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த எந்திரம் வினோத்குமாரின் மீது கவிழ்ந்து அமுக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த வினோத்குமாரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads







CSC Computer Education

Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory