» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீஅழகியகூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் வழிபாடு

புதன் 11, ஜனவரி 2017 11:01:22 AM (IST)



சாத்தான்குளம் அருகேயுள்ள  ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தர் கோவில் அமைந்துள்ளது. நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலமான இங்கு திருவாதிரை திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் தினமும் காலை, மாலையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 10-ம் நாள் திருவாதிரையை முன்னிட்டு இன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளல், பின்னர் நடராஜருக்கு 36 வகையான அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 

தொடர்ந்து ஆருத்ரா தரிசன மகாதாண்ட மகாஅபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணியளவில் பஞ்ச மூர்த்தீஸ்வரர் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர்  கோவிலில் அன்னதானம் நடக்கிறது. திருவாதிரை விழாவில் திரளான பக்தர்கள்  பங்கேற்றனர். விழாவில், திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103வது கரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய சத்தியஞான பரமாச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Black Forest Cakes





Nalam Pasumaiyagam




CSC Computer Education



selvam aqua




Thoothukudi Business Directory