» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தூத்துக்குடி மீனவர்கள் ஆட்சியருடன் சந்திப்பு

புதன் 11, ஜனவரி 2017 12:11:47 PM (IST)இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆன தூத்துக்குடி மீனவர்கள் 7பேர் இன்று ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

கடந்த டிசம்பர் மாதம் 20, மற்றும் 21-ம் தேதிகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி, கோட்டைப்பட்டினம், புதுக்கோட்டை, ஜெகதாபட்டினம், மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 51பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 2-ந் தேதி நடைபெற்ற இந்திய- இலங்கை ஆகிய இருநாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையின் போது கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்த இலங்கை அரசு, மீனவர்களை விடுவிக்கும்படி அந்த நாட்டு நீதித்துறைக்கு பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர்  உட்பட 51 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற்ம் கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 51 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், 51 மீனவர்களையும் நேற்று காலை காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற் படையினர் தங்களது ரோந்து கப்பலில் அழைத்து வந்து மதியம் 12 மணியளவில் கோடியக்கரை அருகே சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். 

இதையடுத்து 51 மீனவர்களும் இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ‘சாகர்’ ரோந்து கப்பல் மூலம் நேற்று மாலை காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் கடலோர காவல் படையினரும், காரைக்கால் மற்றும் தமிழக காவல்துறையினரும் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடி மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் ரவிகுமாரை இன்று சந்தித்தனர். இலங்கை சிறையில் இருந்து மீட்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக்கு அவர்கள்  நன்றி தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads

selvam aqua


Panchai Dairy

Nalam PasumaiyagamNew Shape Tailors
CSC Computer Education


Black Forest Cakes

Johnson's EngineersThoothukudi Business Directory