» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் முதியோர் இல்லம் திறப்பு விழா!

புதன் 11, ஜனவரி 2017 5:27:12 PM (IST)



நாசரேத், ஜமீன் நகரில் ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற முதியோருக்காக டாக்டர் கிருபா முதியோர் இல்லம் திறக்க்பபட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், ஜமீன் நகரில் டாக்டர் கிருபா முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவினை பாஸ்டர் தாமஸ் மகேந்திரன் ஜெபத்துடன் ஆரம்பித்து வைத்தார். அனுசியா வரவேற்று பேசினார். தேசிய கொடியினை சக்கரவர்த்தி டேனியல் ஏற்றினார். சாலமோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சர்ச்சில் டேனியல் கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார். கிளாடிஸ் டேனியல், சுலோச்சனா டேனியல் வாழ்த்துரை வழங்கினர். வினோலியா டேனியல் சிறப்பு பரிசுகள் வழங்கினார். விழா நிகழ்ச்சியில் பல்வேறு நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிகழ்ச்சியினை விக்டோரியா நிதிசினி தொகுத்து வழங்கினார். சங்கீதா நன்றி கூறினார். பாஸ்டர் ஜோயல் இஸ்ரவேல் நிறைவு ஜெபத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua



Nalam Pasumaiyagam

Black Forest Cakes





CSC Computer Education






Thoothukudi Business Directory