» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீவிபத்து.. நாட்டுப்படகு, லாரி எரிந்து நாசம் : போலீஸ் விசாரணை..!!

வியாழன் 12, ஜனவரி 2017 11:43:36 AM (IST)

துாத்துக்குடியில் நேற்றிரவு நடந்த இருவேறு சம்பவங்களில் லாரியும், நாட்டுப்படகும் தீயில் எரிந்து நாசமாயின.

திருச்சி மாவட்டம் முத்திரை கிராமத்தை சேர்ந்த சிவசங்கர் (40) என்பவருக்கு சொந்தமான லாரியை திண்டுக்கல் கமலாபுரத்தை சேர்ந்த ஜோசப் (42) என்பவர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் ஏற்றுவதற்காக துாத்துக்குடிக்கு ஓட்டிவந்துள்ளார். சாம்பல் ஏற்றுவதற்கு வரிசையில் நின்ற போது இரவாகி விட்டதால் லாரியிலேயே ஜோசப் படுத்து உறங்கியுள்ளார். திடீரென இரவு லாரியில் தீ பிடித்து மள மள வென பற்றி எரிய தாெடங்கியுள்ளது.

இதில் லாரியில் இருந்து குதித்து தப்பிய ஜோசப்க்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இவ்விபத்து தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டுப்படகு

அதே போல் துாத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த மீராசா என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்கு சென்று விட்டு நேற்றிரவு தெர்மல் நகர் கடற்கரையில் நிறுத்தியுள்ளனர். அப்போது இன்ஜினிலிருந்து தீ பரவி தொடர்ந்து படகு முழுவதும் பரவி எரிந்து நாசமானது.இவ்விபத்து தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Panchai Dairy

Nalam Pasumaiyagam


CSC Computer Education



New Shape Tailors


Johnson's Engineers

Black Forest Cakes

selvam aqua






Thoothukudi Business Directory