» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரேதமாக தாதுமணல் பதுக்கினால் நடவடிக்கை : புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வியாழன் 4, மே 2017 3:31:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம சுரங்க குத்தகை உரிமம் தடை விதிக்க்பபட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக குடோன்கள் இயங்கி வந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசாணை எண் 156 தொழில்துறை (MMD1) நாள் 08.08.2013ன் படி கனரக தாது மணல் (கார்னட், இல்மனைட், ரூட்டைல் மற்றும் இதர கனிமங்கள்) சுரங்க குத்தகை உரிமம் தடை தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு அனுமதியின்றி கனிமங்களை குவாரி செய்தல், எடுத்து செல்லுதல் தடுப்பு மற்றும் கனிம வணிகர் விதி 2011-ல் விதி 3ன் படி எந்த ஒரு கனிமத்தையும், எந்தவொரு நபரும் உரிய நடைச்சீட்டு (Transit pass) இல்லாமல் எடுத்து தண்டனைக்குரிய குற்றமாகும். அனுசக்தி தாது (சலுகை) தாது விதிகள் 2016 ன் படி (விதி 2(ந)) கார்னட், இலுமினட், ஸிர்கான் (Zircon) ரூட்டைல் போன்ற கனிமங்கள் அணுசக்தி கனிமங்களாக (Atomic Minerals).

மேன்மைமிகு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வின் 11.01.2017 தேதிய தீர்ப்பின்படி (WA 1168 & 1169/2015 and WP 1592/2015) தமிழ்நாடு அரசு பல்வேறு மத்திய/மாநில அரசு துறைகளை சார்ந்த வல்லுனர்கள் கொண்ட குழுவை சத்தியபிரதா சாகு தலைவராக கொண்டு நியமித்து தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றம் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கனரக தாது மணல் இருப்பு விவரம் (Estimate of Stock) குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டு கனரக தாது மணல் இருப்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யாரேனும் தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலங்களிலோ, அரசு புறம்போக்கு நிலங்களிலோ, கடற்கரை பகுதிகளிலோ, சட்டவிரோத சுரங்கப் பணிகள் நடைபெறுவது தெரியவந்தாலும், குடோன் உரிமையாளர் கனரக தாது மணல் இருப்பு வைப்பதற்கு கிடங்கை வாடகைக்கு அனுமதித்திருந்தாலும் அதைப் பற்றிய விபரத்தை மாவட்ட ஆட்சியர்/சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்: 9444186000/ collrtut@nic.in

மாவட்ட வருவாய் அலுவலர்: 9445000929

தூத்துக்குடி சார் ஆட்சியர்: 9445000479

கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்: 9445000481

திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்: 9445000480

மேலும் கனரக தாது மணல் கனிமங்களுக்கு உரிமையுடைய நபர் வேறொருவரின் குடோனை வாடகைக்கு எடுத்து இருந்தாலும் அல்லது குடோனை வாடகைக்கு கொடுத்த நபர் ஆகிய இருவரும் தாமாகவே முன்வந்து மேற்கண்ட அலுவலர்களிடம் இவ்வறிக்கை வெளிவந்து 7 நாட்களுக்குள் எழுத்துமூலமாக தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் யாருக்கேனும் மேற்குறிப்பிட்ட விபரங்கள் தெரிந்திருக்கும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. அவ்விதம், தெரியப்படுத்தாமல், பின்னர் கண்டறியப்பட்டால், அனைவரின் மீதும் சுரங்க மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஓழுங்குபடுத்துதல்) சட்டம் 2015-ன் பிரிவு 21-ன் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

பாதிக்க பட்டவன்மே 4, 2017 - 04:31:26 PM | Posted IP 122.1*****

என்னய்யா இது.. சீக்கிரம் ஆலைய தொரங்கையா.. புள்ளைங்கல்லாம் பசியால் வாடுது. இதுக்கு காரணமானவங்க பதில் சொல்லியே ஆகணும்.

பாஹுபலிமே 4, 2017 - 04:17:15 PM | Posted IP 182.7*****

ஏராளமானோர் தங்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர் அவர்கள் குடும்பத்துக்கு யாரு சார் சோறு போடுவா பெப்சி coke ஸ்டெர்லிட் விடவா தாது மணல் உள்ளது சில பேர் தூண்டுதலின் பேரில் ஆட்சியர் இயங்க கூடாது

பசியாலிமே 4, 2017 - 04:06:05 PM | Posted IP 122.1*****

கலெக்டர் வேலையே மக்கள் செய்யணுமா? ஆயிரக்கணக்கான தொழிலார்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Pop Up Here

New Shape Tailors


Universal Tiles Bazarselvam aqua

Johnson's Engineers

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory