» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுங்கச்சாவடிகளின் அராஜக போக்கை கண்டித்து டியூஜே சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கள் 8, மே 2017 8:29:25 PM (IST)



தூத்துக்குடி வாகைகுளம் டோல்கேட்டில் சுங்கச்சாவடிகளின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையிலிருந்து காரில் விழுப்புரத்திற்குச் சென்று கொண்டிருந்த ஜூனியர் விகடன் செய்தியாளர் குழு மீது டோல்கேட்டில் துப்பாக்கியுடன் இருந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதலை க‌ண்டித்தும், சரியான சாலை பராமரிப்பு வேண்டியும், தமிழகம் முழுவதும் வாகன சுங்கச்சாவடிகளின் அராஜக போக்கை கண்டித்தும் டியூஜே மாநில தலைவர் சுபாஷ் இன்று மாநிலம் தழுவிய பத்திரிகையாளர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று மாலை துாத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் டோல்கேட்டில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (டியூஜே) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டியூஜே மாநில துணைத்தலைவர் நிக்சன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் துாத்துக்குடி மாவட்ட மூத்த பத்திரிகையாளரும், மக்கள் டிவி நிருபருமான ராஜா சாலமோன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வேணு கோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் மாநில இணை செயலாளர் தங்கராஜ், டியூஜே தெற்கு மாவட்ட தலைவர் இருதய ஞானரமேஷ், வடக்கு மாவட்ட தலைவர் டேனியல் சாமுவேல், மாவட்ட பொருளாளர் சாந்தகுமார், செயலாளர் குமாரவேல், செய்தி தொடர்பாளர் காளிதாஸ், மூத்த பத்திரிகையாளர்கள் குமாரவேல், ஆனந்தராஜ், ஜெகதீஷ், முத்துபாண்டி மற்றும் ஆபிரகாம், ஜெபக்குமார். கலையரசு, கேப்டன் டிவி முத்துராமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர தலைவர் ஆர். சக்திமுருகன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தையொட்டி புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Johnson's Engineers




selvam aqua


CSC Computer Education

New Shape Tailors

Universal Tiles Bazar

Black Forest Cakes


Pop Up Here



Thoothukudi Business Directory