» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியை குளிர்வித்த திடீர் கோடைமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் 18, மே 2017 1:51:42 PM (IST)



துாத்துக்குடியில் இன்று மதியம் மழை பெய்தது.இதனால் வெயிலால் புழுங்கி தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

துாத்துக்குடியில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே வெயில் கொளுத்தி வந்தது.கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களிலேயே வெயில் கோடைகாலம் போல அடித்ததால் கோடையை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என துாத்துக்குடி வாசிகள் யோசிக்கதுவங்கினார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடைமழை பெய்த நிலையில் துாத்துக்குடியில் தலை காட்டாமல் இருந்தது.

இந்நிலையில் துாத்துக்குடியில் கடும் வெயில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தவித்து வந்த நிலையில் இன்று மதியம் முதலே வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது.தொடர்ந்து மதியம் சுமார் 1.10 மணிமுதல் 1.30 மணி வரை துாத்துக்குடியில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் தகித்து கொண்டிருந்த துாத்துக்குடி சற்று குளிர்ந்தது.ஆனாலும் இந்த மழை போதாது இன்னும் சிறிது நேரம் அதிகமாக பெய்திருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.


மக்கள் கருத்து

samsunமே 18, 2017 - 08:06:05 PM | Posted IP 59.93*****

super

danielமே 18, 2017 - 07:11:24 PM | Posted IP 61.3.*****

சூப்பர்.

பாலாமே 18, 2017 - 03:25:37 PM | Posted IP 59.89*****

அடடா மழை டா அட மழை டா!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam




selvam aqua

Johnson's Engineers

Pop Up Here

Universal Tiles Bazar


New Shape Tailors



Thoothukudi Business Directory