» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்தாம் வகுப்பு : தூத்துக்குடி மாவட்டம் 97.6% தேர்ச்சி

வெள்ளி 19, மே 2017 10:14:52 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டம் 97.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

மார்ச் 8 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 25,074 பேர் எழுதினர். இதில், 24,361பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் 97.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 963 சதவிதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் 5வது இடம் பிடித்துள்ளது. 

42 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 80 அரசு பள்ளிகள் உட்பட 294 பள்ளிகளில் 157 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 42 அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

CSC Computer Education

Universal Tiles Bazar

New Shape Tailors

Pop Up Here

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


selvam aqua






Thoothukudi Business Directory